There are no items in your cart
Add More
Add More
Item Details | Price |
---|
வாழ்த்து என்பது மனித இன வாழ்வில் வளம் பெருக்கும் ஒரு தெய்வீக ஊற்று ஆகும். உடல், உயிர். மனம், நட்பு, பொருள் இவற்றின் வளம் உயர்த்தி, மனித வாழ்வை இன்ப மயமாக்க வல்ல ஒரு அற்புத மந்திரம் வாழ்த்து. கருவமைப்பு. அறிவுவளர்ச்சி இன்மை. ஏழ்மை. பழக்கம், உணர்ச்சி வயம் இவற்றால் குறுகிய நிலையில் செயல்புரியும் மனதை விரிவடையச் செய்து அன்பும், கருணையும் ஊற்றெடுக்கச் செய்யும் அமுத ஒலி வாழ்த்து.
ஒரு உள்ளத்திலிருந்து வாழ்த்து எழும்போதே மன.அலையை நுண்ணியதாக்கி, ஆன்மீக உணர்வை உண்டாக்கி உடல் செல்களிலுள்ள களங்கங்களைப் போக்க வல்லது அன்போடு கூறும் வாழ்த்து, மனித உடல் ஒரு சீவகாந்தக் களம். இந்தக் களத்திலிருந்து எழும் வாழ்த்து ஒலி வான்காந்தக் களமாகிய பேரியக்க மண்டலத்தில் செல்லும்போது வான் காத்தத்தின் முதற்பொருளாகிய இருப்புநிலையால் அழுத்தப்பட்டு அந்த ஒலியின் ஓட்டத்தில் ஒரு வளைவு உண்டாகிறது.
வாழ்த்து யாருக்கு, யாரை நோக்கிக் கூறப்பட்டதோ அவருக்குள் ஊடுருவிப் பாய்ந்து, வாழ்த்தொலியில் அடங்கியுள்ள குணநலத் தன்மையை அவருக்களித்து விட்டு, மீண்டும் தொடர்ந்து ஓடி, வளையம் போலாகி கடைசியில் அவ்வொலி எழுந்தவிடமே வந்து முடியும்போது, கருமையத்தில் இணைத்து இருப்பாகி விடும். அதற் கேற்ப அறிவாட்சித் தரத்தில் உயர்வும், சிறப்பும் உண்டாகும். இது இயற்கைச் சட்டம் கூர்தலறம் எனப்படும் இறைநிலையில் ஒழுங்காற்றல்.
இதே சட்டப்படி ஒருவர் மற்றொரு வருக்குத் தீங்கு எண்ணினாலும், வருத்தினாலும் அந்த அலையும். இரண்டிடத்திலும் தீமையை விளைவித்துப் பிறகு அது தோன்றியவச் கருமையத்தில் சேர்த்து இருப்பாதி விடும். அவர் அறிவாட்சித் தரம் அதன் அழுத்த வலுவுக்கொப்ப மாற்றமடைந்து விடும்.எனவே உங்களையே கூட நினைந்து வாழ்த்திக் கொள்ளுங்கள்.
இன்னல் புரிவோர். எதிரியாய் நினைப்போர் எவரேனும் இருப்பின் அவர்களும் மனம் திருந்தி, நல்வாழ்வு பெற கருணையோடு வாழ்த்துக - வேதாத்திரி மகரிஷி
உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் இவற்றில் ஓங்கிச் சிறப்பாக வாழ்வேன் என்று தன்னையே வாழ்த்திக் கொள்வது ஒரு நல்ல சங்கல்பம் (Auto-suggestion) ஆகும். வாழ்க்கைத் துணைவரை, பெற்ற குழந்தைகளை, உடன்பிறந்தவர்களை, நண்பர்களை, தொழில் துறையில் தொடர்புடையவர்களை, எல்லாவற்றுக்கும் மேலாக எதிரிகளாக நினைப் பவர்களை வாழ்த்திக் கொண்டேயிருப்பது வாழ்வில் என்றுமே நலம் தரும்.
பிறப்பினால் அறிவாட்சித் தரம் குறைந்தவர்களைக் கூட வாழ்த்தி, வாழ்த்தி உயர்வடையச் செய்யலாம்.எதிர்ப்பாக உள்ளவர்களை வாழ்த்திக் கொண்டேயிருந்தால் அவர்கள் நண்பர்களாகி விடுவார்கள். இவ்வாறாகப் பலப்பல நன்மைகளை அளிக்க வல்லது வாழ்த்து. வாழ்த்தி, வாழ்த்தி வளம் பெறுவோம். வளம் பெருக்குவோம்
PHONE: +91 7904402887 / +91 9445905858